பிரபல திரைப்பட தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் அவர்களுடைய வீட்டிலும் அவருக்கு சொந்தமான பல இடங்களிலும் தொடர்ச்சியாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
யார் இந்த அபிராமி ராமநாதன்?
சினிமா துறையை பொருத்தவரை கலைமாமணி அபிராமி ராமநாதன் என்றால் அனைவருக்கும் பரிச்சயம். ஆனால் இவர் ஒரு திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் என்பதை தாண்டி, பல தொழில்களுக்கு சொந்தக்காரராக இருந்து வருகிறார். தமிழ் திரை உலகத்திலும் சரி, தமிழகத்திலும் சரி இவர் ஒரு முக்கிய புள்ளி என்பது பலரும் அறியாத ஒரு உண்மை.
கலைமாமணி அபிராமி ராமநாதன் அவர்கள், இரு பட்டங்கள் பெற்றவராவார் குறிப்பாக, பொறியியலிலும் ஹோமியோபதி மருத்துவத்திலும் மாஸ்டர் பட்டம் பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் அல்லாமல் அபிராமி மெகா மால் மற்றும் அபிராமி திரையரங்குகளின் சொந்தக்காரராகவும் இவர் திகழ்ந்து வருகிறார்.
சென்னையில் பல இடங்களில் உள்ளது அபிராமி திரையரங்கம் என்றால் அது மிகையல்ல, சென்னை நகர திரைப்பட கண்காட்சியாளர்களின் சங்கம் மற்றும் தமிழ்நாடு சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவராகவும் இவர் திகழ்ந்து வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவராகவும், இந்திய திரைப்பட கூட்டமைப்பின் பொதுச் செயலாளராகவும் இவர் இதற்கு முன்பாக பணியாற்றியுள்ளார்.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை தயாரிப்பாளராகவும் வினோகஸ்தராகவும் பல ஆண்டுகளாக பெரும் புகழோடு இவர் வாழ்ந்து வருகிறார். இந்த சூழலில் தான் அபிராமி ராமநாதனின் போயஸ் கார்டன் அலுவலகம் அவரது இல்லம் உள்ளிட்ட பல இடங்களில் பத்துக்கும் மேற்பட்ட வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர் அவருடைய மேலாளர் மோகன் என்பவருடைய வீட்டிலும் தற்பொழுது வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.