புதுச்சேரியில் வெங்காயத்தின் விலை இரண்டு மடங்கு வரை அதிகரித்து காணப்படுகிறது. நேற்று, 130 டன் வெங்காயம் மட்டுமே வந்தது. இதனால் வெங்காயம் கிலோ ரூ.70க்கு விற்கப்படுகிறது.
மராட்டிய மாநிலம் நாசிக், புனே, ஆந்திரா, ஆகிய பகுதிகளில் இருந்து புதுவைக்கு தினந்தோறும் 300 டன் வெங்காயம் வருவது வழக்கம்.இந்த நிலையில், நாசிக், புனேவில் மழை காரணமாக வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது.
இதனால், நேற்றுமுன்தினம் 150 டன் வெங்காயம் புதுவைக்கு வந்தது. தொடர்ந்து, வெங்காயம் கிலோ ரூ. 65-க்கு விற்கப்பட்டது.இந்த நிலையில் நேற்று, 130 டன் வெங்காயம் மட்டுமே வந்தது. இதனால் வெங்காயம் கிலோ ரூ.70க்கு விற்கப்படுகிறது.
அதுவும் மொத்த வியாபாரிகளிடம் மட்டுமே வெங்காயம் காணப்படுகிறது. சில்லறை கடைகளில் வெங்காயம் தட்டுப்பாட்டுடன் காணப்படுகிறது.வெங்காயத்தின் தேவைக்கு ஏற்ப வரத்து இல்லாததால் மேலும் விலை கூடும் அபாயம் உள்ளது.