சிறு வயது முதலே வெஸ்டர்ன் இசையை கற்றுக்கொண்டவர் ஆண்ட்ரியா. ஒரு பாடகி ஆக வேண்டும், இசை நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்பதுதான் அவரின் ஆசையாக இருந்தது. அது அவரின் வாழ்க்கையிலும் நடந்தது. தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார். கிறக்கமான குரலில் பாடி ரசிகர்களை கிறங்க வைப்பது ஆண்ட்ரியாவின் பிளஸ் பாயிண்ட். அஸ்கி குரலில் அவர் பாடிய பல பாடல்கள் இப்போதும் ஹிட் லிஸ்ட்டில் இருக்கிறது. பாடகியான ஆண்ட்ரியாவுக்குள் ஒரு நடிகையை பார்த்தவர் இயக்குனர் கவுதம் மேனன்தான். அவர் இயக்கத்தில் வெளியான ‘பச்சக்கிளி முத்துச்சரம்’ படத்தில் ஒரு நல்ல வேடத்தில் நடித்திருந்தார்.
அதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களிலும் நடித்தார். ஒருபக்கம் திரைப்படங்களில் பாடுவது, நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுப்பது, இசைக்கச்சேரிகளில் பாடுவது என கலக்கி வருகிறார். அரண்மனை 3 படத்திற்கு பின் அவரின் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. ஆனால், வெளிநாடுகளில் தொடர்ந்து இசைக்கச்சேரிகளை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சி தொடர்பான பல புகைப்படங்களையும் ஆண்ட்ரியா தனது சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.
மேலும், அவ்வப்போது பாலிவுட் நடிகைகள் போல கிளுகிளுப்பான உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களையும் ஆண்ட்ரியா வெளியிட்டு ரசிகர்களை சூடேத்தி வருகிறார்.அந்தவகையில், சமீபத்தில் அந்தமானுக்கு சுற்றுலா சென்ற ஆண்ட்ரியா அங்கு பிகினி உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்திருக்கிறார்.