பல்கலைக்கழக செனட் உறுப்பினர்களை "சங்க பரிவார் ஆட்களால்" நிரப்பியதாகக் குற்றம் சாட்டி SFI உறுப்பினர்கள் ஆரிப் கானுக்கு எதிராக கருப்புக் கொடி காட்டி வருகின்றனர். இந்திய மாணவர் கூட்டமைப்பு (SFI) உறுப்பினர்கள் தம்மை நோக்கி கருப்புக் கொடி காட்டியதைக் கண்டித்த கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன் தன்னை தாக்குவதற்கு குண்டர்களை அனுப்பியதாக திங்கள்கிழமை குற்றம் சாட்டினார்.பல்கலைக்கழக செனட்களை "சங்க பரிவார் ஆட்களால்" நிரப்பியதாகக் குற்றம் சாட்டி SFI உறுப்பினர்கள் ஆரிப் கானுக்கு எதிராக கருப்புக் கொடி காட்டி வருகின்றனர்.
திங்களன்று, ஆரிப் கான் டெல்லி செல்ல விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, SFI உறுப்பினர்கள் குழு, அவருக்கு கருப்புக் கொடிகளைக் காட்டி, அவரது காருக்கு அருகில் சென்று கோஷங்களை எழுப்பினர்.போராட்டத்தால் ஆத்திரமடைந்த கான், தனது காரில் இருந்து இறங்கி, எதிர்ப்பாளர்களை நோக்கி நடந்து சென்று, ’பிளடி கிரிமினல்ஸ், முடிந்தால் வாங்க’ என்றார்.
பின்னர், போலீசாரை நோக்கி திரும்பிய கான், அவர்கள் எப்படி என் அருகில் வந்தார்கள்? இங்குள்ள போலீஸ் அதிகாரி யார்? இந்த கிரிமினல்ஸ் என் காரை தாக்குகின்றனர், என்றார்.முதல்வர் மீது குற்றம்சாட்டிய ஆளுநர், ’...நான் கீழே இறங்கியதும் போலீசார் அவர்களை காரில் ஏற்றி அனுப்பினர், அவர்கள் ஓடிவிட்டனர். முதல்வர் வழிகாட்டும் போது அப்பாவி போலீஸ் என்ன செய்ய முடியும். முதல்வர் தான் சதி செய்கிறார். என்னை உடல் ரீதியாக காயப்படுத்தவே இவர்களை அனுப்புகிறார் என்பதை நான் உறுதியாக கூறுகிறேன்… என்னை தாக்க சதி செய்வது முதலமைச்சரின் வேலை அல்ல…” என்று ஆளுநர் ஆரிப் கான் கூறினார்.