ரிலையன்ஸ் ஜியோ நேற்று (செவ்வாய்க் கிழமை) குடியரசு தின சலுகையுடன் வருடாந்திர ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்தது. ரூ.2,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ப்ரீபெய்ட் திட்டமானது தினமும் 2.5 ஜிபி 4ஜி டேட்டா, அன்லிமிடெட் காலிங் உடன் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. அதோடு அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் இலவசமாக வழங்குகிறது.கூடுதலாக, இந்த திட்டத்தில் குடியரசு தின சலுகையாக ஸ்விகி, அஜியோ ஷாப்பிங் கூப்பன்கள், Ixigo வழியாக விமானக் கட்டணங்களில் தள்ளுபடி, ரிலையன்ஸ் டிஜிட்டலில் குறிப்பிட்ட பொருட்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி போன்ற நன்மைகளையும் வழங்குகிறது.
இந்த ரீசார்ஜ் திட்டம் சராசரியாக மாதத்திற்கு ரூ.230 செலவாகிறது. ஜனவரி 15 முதல் ஜனவரி 30 வரை மை ஜியோ ஆப் மூலல் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம். இது புதிய ரீசார்ஜ் திட்டம் இல்லை, ஏற்கனவே உள்ள வருடாந்திர திட்டத்தில் குடியரசு தின சலுகையாக கூடுதல் நன்மைகளை வழங்குகிறது. கூடுதல் நன்மைகளில் ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ் மற்றும் ஜியோ சினிமா சந்தா (அடிப்படை) ஆகியவையும் வழங்கிறது.
குடியரசு தினச் சலுகையின் ஒரு பகுதியாக, ரிலையன்ஸ் டிஜிட்டலில் குறிப்பிட்ட பொருட்களை வாங்கும் போது ஜியோ 10 சதவீத தள்ளுபடியை வழங்குகிறது. அதாவது ரூ.5,000-க்கு மேல் மற்றும் ரூ.10,000க்குள் பொருட்கள் வாங்கினால் இந்த தள்ளுபடியை பெறலாம். இதன் பொருள், ரூ. 1,00,000 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள கேஜெட்டை வாங்கினால் ரூ.10,000 தள்ளுபடி கிடைக்கும்.
ஜியோ ரூ. 125 மதிப்புள்ள இரண்டு ஸ்விக்கி கூப்பன்களையும் வழங்குகிறது, அவை ரூ. 299க்கு மேல் மதிப்புள்ள ஆர்டர்களில் ரிடீம் செய்யப்படலாம். மேலும் நிறுவனம் இக்ஸிகோ கூப்பனையும் வழங்குகிறது. இது விமான டிக்கெட் விலையை மூன்று பேக்ஸுக்கு 1,500 ஆகவும், இரண்டுக்கு ரூ. 1,000 ஆகவும் குறைக்கிறது. மற்றும் ஒரு டிக்கெட்டுக்கு ரூ. 500 தள்ளுபடி வழங்குகிறது.ஜியோவின் குடியரசு தின ஆஃபரில் அஜியோ தளத்தில் ரூ.2,499க்கு மேல் ஆடைகள் வாங்கும் போது ரூ.500 மதிப்புள்ள பிளாட் அஜியோ தள்ளுபடி கூப்பனைபெறலாம். கடைசியாக, இந்தத் திட்டம் தீராவில் ரூ. 999க்கு மேல் மதிப்புள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கு 30 சதவீத தள்ளுபடியை வழங்குகிறது.