இந்தியாவில் தங்கம் விலை நாளுக்கு நாள் மாற்றத்தை சந்தித்து வரும் நிலையில், மங்களகரமான மாதமாக கருதப்படும் தை மாதத்தில் அதிகமான முகூர்த்த தினம், கிரகபிரவேசம் உள்ளிட்ட நிகழ்வகள் நடைபெறும் என்பதால் தங்கள் விலைவில் மாற்றம் அதிகரிப்பது வழக்கமான ஒன்று. அந்த வகையில் விரைவில் தை முகூர்த்த தினங்கள் வர உள்ளதால், தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்றம் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கடந்த 3 தினங்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை சற்று குறைந்ததால், பெரும்பாலான மக்கள், ஆபரணங்களை வாங்க, நகைக்கடைகளில் குவிந்த நிலையில், இன்று தங்கம் விலை திடீரென சற்று ஏற்றம் கண்டது. இதனால் நகை வாங்கலாம் என்று ஆர்வத்துடன் இருந்த பலரும் சற்று ஏமாற்றத்தை சந்தித்த நிலையில், அடுத்தடுத்து நாட்களில் தை முகூர்த்தம் வர உள்ளதால், தங்கம் விலை மேலும் உயரும் வாய்ப்பு உள்ளது.
சர்வதேச சந்தையில் டாலரின் மதிப்புக்கு ஏற்ப தங்கத்தின் விலை நிர்ணையிக்கப்படும் நிலையில், இன்று சர்வதேச சந்தையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் (10-கிராம்) விலை, 300 ரூபாய் அதிகரித்து 58100 ஆக உயர்ந்துள்ளது. இதில் சவரன் ஒன்றுக்கு 240 ரூபாய் அதிகரித்து46480-ரூபாயாக உயர்ந்துள்ளது. 24 கேரட் ஆபரணத்தங்கம் 10 கிராம் விலை, ரூ330 அதிகரித்து, ரூ63380-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கம் விலை 10 கிராம்க்கு ரூ186- அதிகரித்து ரூ47536-க்கு விற்கப்படுகிறது.