2011 தேர்தலுக்கு பிறகு எம்.எல்.ஏக்கள் செய்த துரோக்கத்தால்தான் விஜயகாந்த் உடல் நிலையில் பாதிக்கப்பட்டது என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.சென்னை கோயம்பேட்டில் தே.மு.தி.க தலைமை அலுவகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது “ அரசியலில் இருப்பதே சவால்தான், குறிப்பாக பெண்கள் இருப்பது மிகப்பெரிய சவால். அதற்கு உதாரணம் ஜெயலலிதா.
எந்த சவாலையும் சந்திக்க தயார். அரசியல் இயக்க பணியில் விஜகாந்த் உடன் தொட்டத்தில் இருந்தே பயணித்து வருகிறேன். தொண்டர்கள் மீதான நம்பிக்கை உடன் பயணத்தை தொடர்ந்து வருகிறோம். விஜயகாந்த் உடல் நிலையில் சிறிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.2011 தேர்தலுக்கு பிறகு எம். எல்.ஏக்கள் செய்த துரோகங்களால்தான் வியகாந்துக்கு சருக்கல் வந்தது. அதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் உடல் நலமும் பாதிக்கப்பட்டது. விஜயகாந்தின் உத்தரவின்படியே தே.மு.தி.க.வின் செயல்பாடுகள் எப்போதும் இருக்கும்.
உட்கட்சி தேர்தல் முடிந்தவுடன் தே.மு.தி.க.வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு நடைபெற இருக்கிறது. இதில் விஜயகாந்த் கலந்து கொள்வார். முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார். பொதுச்செயலாளராக நான் தேர்வானது திடீர் என்று எடுத்த முடிவல்ல” என்று அவர் கூறினார்.