சித்தார்த்த சக்ரவர்த்தி, “தனது AI கருவியானது வேட்பாளர் தகவல்களை வெளிப்படையாக வெளியிடுவதோடு வாக்காளர்கள் தகவலறிந்த தேர்வு செய்ய உதவும்” என்கிறார்.36 வயதான ஸ்டார்ட்அப் நிறுவனர் சித்தார்த்த சக்கரவர்த்தியின் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் (EC) ஏற்றுக்கொண்டதன் மூலம் தெலுங்கானாவில் அரசியல் அரங்கில் செயற்கை நுண்ணறிவு (AI) நுழைந்துள்ளது.
சக்ரவர்த்தி பிரச்சாரத்திற்காக AI ஐ உருவாக்கி, அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஜூப்ளி ஹில்ஸ் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார். மேலும், பிரச்சாரத்தின் போது தனது தயாரிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.இது குறித்து சக்கரவர்த்தி, “"அரசியல்வாதிகளுக்கான ஒரு எளிய ஊடாடும் சாட்போட் ஒரு சுவரொட்டி அல்லது விளம்பரத்திற்கு அப்பால் மிகவும் சுறுசுறுப்பான ஈடுபாட்டை உருவாக்க முடியும், சரியான தகவல்களுடன் வாக்காளர்களுக்கு அதிகாரம் அளிக்க முடியும், மேலும் தொகுதி தொடர்பான வாக்காளர்களின் கவலைகளை புரிந்து கொள்ள முடியும்" என்கிறார்.
ஸ்டார்ட்அப் நிறுவனர் ஜூப்ளி ஹில்ஸில் இருந்து களமிறங்கிய 20 வேட்பாளர்களில் ஒருவர் ஆவார். இவர், பாரத ராஷ்டிர சமிதியின் (பிஆர்எஸ்) இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்த மகந்தி கோபிநாத் மற்றும் காங்கிரஸின் முன்னாள் இந்திய கேப்டன் முகமது அசாருதீன் போன்ற பெரிய தலைகளுக்கு எதிராக களம் காண்கிறார்.மேலும் இந்தத் தொகுதியில், பாஜக லங்காலா தீபக் ரெட்டியும், AIMIM சார்பில் முகமது ரஷீத் ஃபராசுதீனும் களத்தில் இருப்பதால், தேர்தல் களம் சூடுபிடித்து காணப்படுகிறது.சக்ரவர்த்தி தனது பிரச்சாரத்தின் மூலம், அரசியல் பிரச்சாரங்களை தொழில்நுட்பம் எவ்வாறு மேம்படுத்துகிறது மற்றும் அவரைப் போன்ற புதியவர்களுக்கு ஒரு சமமான களத்தை உருவாக்குவதைக் காட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கூறுகிறார்.தற்போது AI ஆனது வாடிக்கையாளர் பராமரிப்பு, சுகாதாரம் மற்றும் F&B தொழில் போன்ற துறைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், 36 வயதான அவர் அரசியலில் அதன் பயன்பாடு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறுகிறார்.
மேலும் அவர், “AI ஆனது உலகம் முழுவதும் ஆர்வத்தை உருவாக்கியுள்ளது. அரசியல் பிரச்சாரத்தை மறுவடிவமைக்க அதைப் பயன்படுத்துவதற்கான யோசனையை நாங்கள் கொண்டு வந்தோம். ஒரு AI உதவியாளர் அல்லது ஒரு வேட்பாளரின் AI அவதாரம் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான வாக்காளர்களுடன் தொடர்பு கொள்ள பயன்படுத்தப்படலாம்” என்கிறார்சக்ரவர்த்தி மற்றும் அவரது குழுவினரால் உருவாக்கப்பட்ட AI கருவியானது, வேட்பாளரின் சாதனைகள், தொலைநோக்கு மற்றும் வாக்குறுதிகள் பற்றிய உரையாடல்களை வடிவமைக்கப் பயன்படுகிறது. வேட்பாளர் பற்றிய தகவல்கள், தேர்தல் பிரமாணப் பத்திரம் ஆகியவை கருவியைப் பயன்படுத்தி பொது களத்தில் வெளியிடப்படலாம், இதனால் வாக்காளர் தகவலறிந்த தேர்வு செய்ய முடியும்.சக்ரவர்த்தியின் குழுவினர் எட்டு மாதங்களுக்கு முன்பு பணியைத் தொடங்கி அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்களை அணுகியுள்ளனர்.
சில தலைவர்கள் இதைப் பயன்படுத்த ஆர்வமாக இருந்தபோதிலும், இன்னும் சிலர் விரும்பவில்லை. இதில், QR குறியீடு மூலம், டிஜிட்டல் விளம்பரங்களைப் பார்க்கும் வாக்காளர்கள் WhatApp உரையாடலைத் தொடங்க முடியும், இது தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கிறது. இருப்பினும், இந்தி மற்றும் பிற பிராந்திய மொழிகளிலும் அதைக் கிடைக்கச் செய்யும் பணியில் குழு ஈடுபட்டுள்ளது. குழுவிற்கு அடுத்த படியாக AI-இயக்கப்பட்ட தொலைபேசி உரையாடல்களை உருவாக்க வேண்டும். ஒரு வேட்பாளருக்கு ஏற்ற மாதிரி இரண்டு வாரங்களில் பயிற்சியளிக்கப்படும் என்று சக்கரவர்த்தி நம்புகிறார்.தொடர்ந்து, மற்ற வேட்பாளர்களைப் போலல்லாமல், பிரச்சாரத்திற்குச் செல்லமாட்டார். "நாங்கள் டிஜிட்டல் விளம்பரங்களுக்குச் செல்வோம் மற்றும் எங்கள் கருவி எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதைக் காட்ட பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் சமூகத்துடன் ஈடுபடுவோம்" என்று சக்ரவர்த்தி கூறினார்.தெலுங்கானாவில் நவம்பர் 30-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனுக்கள் பரிசீலனை மற்றும் நிராகரிப்புக்குப் பிறகு மொத்தம் 119 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 2,898 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.