தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகைகளில் முக்கியமானவர் ராதிகா சரத்குமார். தற்போது சின்னத்திரை சீரியல் மற்றும் திரைப்படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடித்து வரும் இவர், அவ்வப்போது வெளிநாடுகள் செல்வது, குடும்பத்துடன் சுற்றுலா செல்வது என இருந்து வரும் நிலையில், இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூகவலைளங்களில் வெளியிட்டு வருகிறார்.
அதே போல் தான் செல்லும் இடங்களில் தான் சந்தித்த வித்தியாசமான அனுபவங்கள் நிகழ்வுகள் குறித்தும், பேசி வரும் ராதிகா தற்போது பகிர்ந்துள்ள ஒரு தகவல் பலருக்கும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூரில் உள்ள ஸ்ரீ நாராயணி மருத்துவமனை சார்பில் உலக நீரிழிவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகை ராதிகா சரத்குமார் பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ராதிகா சரத்குமார் கூறுகையில், சீரியல் பார்த்தாலும் நீரிழிவு நோய் வரும் என்று சொல்கிறார்கள். நமது வாழ்வியல் தான் இதற்கு முக்கிய காரணம். அமெரிக்காவில் சர்க்கரை நோய் வராமல் தடுப்பதற்கு மருத்து கொடுக்கிறேன் என்றார்கள். சரி அதை வாங்கலாம் என்றால் அதன் விலை 300 டாலர் என்று சொன்னார்கள். அதன்பிறகு அந்த பணத்தை செலுத்தி மருந்தை வாங்கினேன்
காரில் வரும்போது இந்த மருந்தில் என்னவெல்லாம் இருக்கிறது என்று படித்து பார்த்தபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்த பாட்டியில்ல உள்ள மருந்து முழுவதும் வேப்பிலை சாற்றை பதப்படுத்தியுள்ளனர். நமது வீடுகளில் சாதாரணமாக கிடைக்கும் வேப்பிலையை 300 டாலர் கொடுத்து வாங்கிவிட்டேன். ஆனாலும் அது எனக்கு நல்ல பலனை கொடுத்தது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்று சொல்வது போல் உள்ளது.
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பொதுவாக அனைவரின் வீடுகளிலும் வேப்பிலை இருக்கிறது. ஆனால் அதை நான் காசு கொடுத்து வாங்கினேன். நம்மிடம் இருக்கும் வேப்பிலையை வெளிநாட்டினர் கொண்டு சென்று அதை நமக்கே மருந்தாக கொடுத்து அதன் மகத்துவத்தை சொல்லிக்கொடுப்பதை பார்த்து நான் வியந்து போனேன் என்று ராதிகா குறிப்பிட்டுள்ளார்.