மாநிலங்களுக்கு வரி பகிர்வாக ரூ. 72 ஆயிரத்து 961 கோடியை மத்திய அரசு விடுவித்தது. தமிழ்நாட்டிற்கான வரி பகிர்வாக ரூ. 2 ஆயிரத்து 976 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. மாநிலங்களுக்கு வரி பகிர்வாக ரூ. 72 ஆயிரத்து 961 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. புத்தாண்டு மற்றும் பண்டிகை காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கூடுதல் தவணையை முன்கூட்டியே விடுவித்துள்ளது. தமிழ்நாட்டிற்கான வரி பகிர்வாக ரூ. 2 ஆயிரத்து 976 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
மாநிலங்களுக்கு மத்திய அரசு வழக்கமான வரி பகிர்வை விடுத்தித்துள்ளது. எப்போதும், ஒவ்வொரு மாதம் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஒரு குறிப்பிட்ட வரி பகிர்வை விடுவிப்பது வாக்கம். மொத்தம் 14 தவணைகளாக இந்த தொகை விடுவிக்கப்படும். அதன்படி, மாநிலங்களுக்கு டிசம்பர் மாதத்திற்கான பங்காக ரூ. 72,961.21 கோடி ஏற்கெனவே, கடந்த டிசம்பர் 11-ம் தேதி விடுவிக்கப்பட்டு விட்டது.
இந்நிலையில், கூடுதலாக, மாநிலங்களுக்கு வரி பகிர்வாக ரூ.72 ஆயிரத்து 961.61 கோடி மத்திய அரசால் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு புத்தாண்டு மற்றும் பண்டிகை காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கூடுதல் தவணையை முன்கூட்டியே விடுவித்துள்ளது. இந்த பண்டிகை காலங்களில் உள்கட்டமைப்பு திட்டங்கள செயல்படுத்தவும் மாநில அரசுகளின் கரங்களை வலுப்படுத்தவும் இந்த தொகை விடுவிக்கப்பட்டிருக்கிறது. இதில் தமிழகத்தின் பங்காக ரூ. 2,976.10 கோடி மத்திய அரசால் விடுவிக்கப்பட்டுள்ளது.