தோசை அனைவருக்கும் பிடித்த உணவு. பலரும் விதவிதமாக தோசை சுட்டு சாப்பிடுவார்கள். பெரும்பாலும் அனைவரும் இரும்புக் கல்லில் தோசை சுட்டு சாப்பிடுவார்கள். சிலர் நான் ஸ்டிக் தவா மூலம் தோசை சுடுவார்கள். ஆனால் இரும்புக் கல்லில் தோசை சுட்டு சாப்பிடுவதே ஒரு தனி சுவைதான். ஆனால் அதை சரியான முறையில் பராமரித்தால்தான் தோசை நன்கு மொறுவலாக வரும். இல்லை என்றால் கல்லில் ஒட்டிக் கொண்டு பிய்த்துக் கொண்டு வரும்.
ஆனால் இந்த சிம்பிள் டிப்ஸை ஃபாலோ செய்தால், எந்த தோசை கல்லாக இருந்தாலும் தோசை சூப்பர் சாஃப்டாக வரும். அது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.தோசை சுடுவதற்கு முன் தோசை கல் சுத்தமாக இருக்க வேண்டும். எனவே தோசை கல்லில் கடைசியாக சுட்ட தோசையின் மிச்சம், அடி பிடித்த துகள்கள் இருந்தால் அவற்றை நீக்கி நன்றாக சுத்தம் செய்துக் கொள்ளுங்கள். அதற்காக தோசை கரண்டியை போட்டு தேய்க்கக் கூடாது. அவ்வாறு செய்தால் கல்லில் கீரல் விழுந்து தோசை வராது. எனவே துணியை பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும்.
கல்லை சுத்தம் செய்த பின், அடுப்பில் வைத்து சிறிது காயந்தவுடன் உருளைகிழங்கு அல்லது வெங்காயத்தை பகுதியாக நறுக்கிவிட்டு எண்ணெய்யில் முக்கி தோசைக் கல்லில் நன்றாக தேய்த்துக் கொள்ளவும். அதிக எண்ணெய் விட்டு தேய்க்கக் கூடாது, ஏனெனில் தோசை மாவு கல்லில் ஒட்டாது. எனவே ஒரு சொட்டு எண்ணெய் விட்டு கல் முழுவதும் தேய்க்க வேண்டும்.எண்ணெய் தேய்த்த பின் மாவை ஊற்றி வட்டமாக சுற்றுங்கள். பின் மேலே எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக சிவந்ததும் தோசையை கரண்டியால் லாவகமாக எடுத்தால், அழகாக ஒட்டாமல் வந்துவிடும்.பொதுவாக அனைவரும் செய்யும் தவறு என்னவென்றால், ஃப்ரிட்ஜில் வைத்திருந்த மாவை நேரடியாக அப்படியே எடுத்து தோசை சுடுவார்கள். ஆனால் அப்படி செய்யக் கூடாது. தோசை சுடப்போகிறீர்கள் எனில் மாவை 15 அல்லது 20 நிமிடங்களுக்கு முன்பாகவே வெளியே எடுத்துவிடுங்கள். இவ்வாறு செய்தால் மாவு சுடும்போது நன்றாக வரும். கல்லிலும் ஒட்டாமல் வரும்.
தோசை சரியாக வராததற்கு தண்ணீர் பதம் சரியாக இல்லாததும் ஒரு காரணம். தோசை மாவில் அதிகமாக தண்ணீர் ஊற்றக்கூடாது. அவ்வாறு ஊற்றினால் தோசை கல்லில் ஒட்டிக்கொள்ளும். எனவே சற்று கெட்டியாக இருக்க வேண்டும்.தோசைக்கல்லை அடிக்கடி தேய்த்து, கீறினாலும் தோசை வராது. தோசை சுட்ட பின் அதை காட்டன் துணியால் துடைத்து மூடிபோட்டு மூடி வையுங்கள். வாரம் ஒரு முறை தேய்த்தால் போதும். அதுவும் சோப்பு ஆயிலை கையில் ஊற்றி தேயுங்கள். தேய்த்து விலக்கியப் பின், தோசைக்கல் ஈரம் காய்ந்ததும் ஒரு துளி எண்ணெய் ஊற்றி தடவி வையுங்கள். கல்லில் எண்ணெய் தன்மை இருக்க வேண்டும். அப்போதுதான் தோசை நன்றாக வரும்.