சென்னையில் ஜனவரி 7, 8 தேதிகளில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் (ஜி.ஐ.எம் 2024) ஆஸ்திரேலியா-தமிழ்நாடு உறவு காட்சிப்படுத்தப்பட உள்ளது. அந்நாட்டிலிருந்து 80-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டு பங்கேற்கின்றனர்.
உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்பாளர்களை அரங்கில் நிறுத்தவும், ஜனவரி 7-ம் தேதி ஆஸ்திரேலியா நாட்டு அமர்வில் கலந்துகொள்ளவும், இந்தியாவின் நெருங்கிய கூட்டாளர்களில் ஒருவருடனான வாய்ப்புகளைப் பற்றி மேலும் அறியவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று அந்நாட்டின் தூதரக அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், தமிழக அரசின் கூட்டாளியான மேற்கு ஆஸ்திரேலியாவும் ஜனவரி 7-ம் தேதி ‘தமிழ்நாடு மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா இடையே பொருளாதார உறவுகளை வளர்ப்பது’ என்ற தலைப்பில் ஒரு தனி மாநில அமர்வை நடத்துகிறது.இந்த கலந்துரையாடலுக்கு மேற்கு ஆஸ்திரேலிய மாகாண தொழில் மேம்பாடு, வேலைகள் மற்றும் வர்த்தக அமைச்சர் ஜெகதீஷ் கிருஷ்ணன் எம்.எல்.ஏ மற்றும் தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தலைமை தாங்குகின்றனர்.