பிரக்கோலியில் குறைந்த கலோரிகள் உள்ளது. அதிக நார்சத்து, உள்ளது. 100 கிராம் பிரக்கோலியில் உள்ள சத்துகளை பற்றி தெரிந்துகொள்வோம்.
பிரக்கோலியில் குறைந்த கலோரிகள் உள்ளது. அதிக நார்சத்து, உள்ளது. 100 கிராம் பிரக்கோலியில் உள்ள சத்துகளை பற்றி தெரிந்துகொள்வோம்.
கலோரிகள் : 35
புரத சத்து: 2.3 கிராம்
கார்போஹைட்ரேட்: 5.6 கிராம்
நார்சத்து: 2.2 கிராம்
கொழுப்பு சத்து: 0.3 கிராம்
வைட்டமின் சி, வைட்டமின் கே, போலேட் உள்ளது.
இதில் அதிக அளவில் ஆண்டி ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. இதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்டான சல்போரபைன், புற்றுநோய்யை தடுக்கலாம் என்று கூறப்படுகிறது. இது புற்று நோய்யை உருவாக்கும் காரணிகளை உடலில் இருந்து வெளியேற்றும் என்றும் கூறப்படுகிறது.
இதில் உள்ள நார்சத்து, ஜீரணத்திற்கு உதவுகிறது. குடலையும் ஆரோக்கியமாக வைத்துகொள்ள உதவுகிறது. இது மலச்சிக்கலை குணப்படுத்துகிறது. வயிற்றின் செயல்பாடுகளை சீராக வைத்துகொள்கிறது. குடலில் உள்ள நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை சீராக வைத்துகொள்ள உதவுகிறது.
இதில் உள்ள வைட்டமின் சி கொலஜன் உற்பத்தியை அதிகப்படுத்தும். இதனால் ஆரோக்கியமான சருமம் கிடைக்கும். கொலஜன் சருமத்தின் சுருங்கி விரியும் தன்மையை நீண்டிக்க உதவுவதால், வயதாவதை தடுக்கும்.
வைட்டமின் கே உள்ளதால், எலும்புகளின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கும். இதனால் எலும்பு முறிவு ஏற்படாது. இதில் குறைந்த கிளைசிமிக் இண்டக்ஸ் உள்ளதால் சுகர் அளவை இது குறைக்கும்.