வாட்ஸ்அப் ஷேட் பக்கத்தில் வரும் லாஸ்ட் சீன் உடன் அவர்களின் ஸ்டேட்ஸ் பற்றிய தகவலும் இனி காண்பிக்கப்படும். உலகளவில் 2 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட மெட்டாவின் இன்ஸ்டண்ட் மெசேஜிங் தளமான வாட்ஸ்அப் புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது.
ஷேட் பக்கத்தில் வரும் பயனரின் லாஸ்ட் சீன் உடன் அவர்களின் ஸ்டேட்ஸ் பற்றிய தகவலும் இனி காண்பிக்கப்படும்.WABetaInfo தகவல் படி, இது தற்போது ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் (v2.23.25.11) -ல் சோதனை செய்யப்பட்டு வருகிறது. அதாவது பயனர் ஒருவர் லாஸ்ட் சீன் அம்சத்தை எனேபிள் செய்து வைத்திருந்தால் அதற்கு கீழ் அவர்களின் ஸ்டேட்ஸ் பற்றிய தகவல் வழங்கும்.
வாட்ஸ்அப் ஷேட் பக்கத்தில் பயனரின் பெயருக்கு கீழ் அவர்களின் லாஸ்ட் சீன் நிலை காண்பிக்கும். தற்போது அந்த இடத்தில் மற்றொரு அம்சமாக அவர்கள் ஸ்டேட்ஸ் ஏதேனும் வைத்திருந்தால் அது பற்றிய தகவலும் தெரிவிக்கும். வாட்ஸ்அப் ப்ரைவசி செட்டிங்ஸ் அம்சத்தில் இதை எமேபிள் செய்யலாம்.எனினும் இந்த அம்சம் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அனைவரது பயன்பாட்டிற்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.