மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது மேலும் புதிதாக அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் ஸ்டிக்கர் அம்சம் பெரிதும் வரவேற்பு பெற்ற ஒன்றாகும். காமெடி நடிகர்கள் வசனம், பிரபலங்கள் எனப் பல்வேறு வகைகளில் ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டது.
அந்த வகையில் தற்போது 3-ம் தரப்பு செயலி ஏதும் இல்லாமல் வாட்ஸ்அப்லேயே நீங்கள் ஸ்டிக்கர் உருவாக்கலாம், பழைய ஸ்டிக்கர்களை எடிட்-ம் செய்யலாம். ஏன் ஒரு படி மேலாக உங்களுடைய முகத்தை கொண்டு கூட ஸ்டிக்கர் உருவாக்கலாம். எப்படி செய்வது என்று இங்கு பார்ப்போம்.
இந்த அம்சம் ஆப்பிள் பயனர்கள், வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. படிப்படியாக ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.