சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் இருமுடி எடுத்துச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதாவது முறையான சோதனைகளுக்கு பின்னர் இருமுடி எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும்.சபரிமலை யாத்திரையின் ஒரு பகுதியாக பிரசாதமாக வழங்கப்படும் தேங்காய்களை குறிப்பிட்ட காலத்திற்கு கேபின் பேக்கேஜில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது.
விமானப் பாதுகாப்பு ஒழுங்குமுறை அதிகாரியான சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி (பிசிஏஎஸ்) தற்காலிக நிவாரணம் வழங்கியதைத் தொடர்ந்து, சபரிமலை யாத்ரீகர்கள் விமானப் பயணத்தின் போது கேபின் பேக்கேஜில் இருமுடிக் கட்டு தேங்காய் எடுத்துச் செல்ல முடியும்.
இது, 2023 ஜனவரி 15ஆம் தேதி வரை மட்டுமே அனுமதிக்கப்படும். இந்த அனுமதி இந்தியா முழுவதும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்தியாவில் எந்த இடத்தில் இருந்தும் விமானத்தில் இருமுடி உடன் பயணிக்கலாம். மகர ஜோதியை காணவேண்டியே, ஐயப்ப பக்தர்கள் 48 நாள்கள் முதல் 60 நாள்கள் வரையில் கடுமையான விரத முறைகளை கடைபிடிப்பார்கள்.இறுதியில் இருமுடி கட்டிக்கொண்டு மகர விளக்கு பூஜை தினத்தன்று சபரிமலைக்கு வந்து காத்திருப்பார்கள். சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்குப் பூஜைத் திருவிழா ஏழு நாட்கள் கொண்டாடப்படுகிறது.நிறைவாக சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர ஜோதியை தரிசித்துவிட்டு வீடு திரும்புவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.