கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் 2-வது முறையாக கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த பிரபல சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக், தற்போது தனது வளைகாப்பு புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தனுஷ் நடிப்பில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான புதுக்கோட்டையில் சரவணன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதேவி. இந்த படத்தில் தனுஷின் தங்கையாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஸ்ரீகாந்த் நடிப்பில் கிழக்கு கடற்கரை சாலை என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த இரு படங்களுமே அவருக்கு கை கொடுக்காத நிலையில், 2007-ம் ஆண்டு சன்டிவியின் செல்லமடி நீ எனக்கு என்ற சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.
தொடர்ந்து, கஸ்தூரி, தங்கம், இளவரசி, வாணி ராணி, செம்பருத்தி, ராஜா ராணி, அரண்மனைக்கிளி, காற்றுக்கென்ன வேலி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ள ஸ்ரீதேவி அசோக் தற்போது விஜய் டிவியின் பொன்னி மற்றும் மோதலும் காதலும் என 2 சீரியல்களில் நடித்து வருகிறார். ராஜா ராணி சீரியலில் நடிக்கும்போது அசோக் என்பரை திருமணம் செய்துகொண்ட ஸ்ரீதேவிக்கு, சித்தாரா என்ற பெண் குழந்தை உள்ளது.
குழந்தை பிறந்து ஓரிரு வருடங்கள் மீண்டும் சின்னத்திரைக்கு வந்த ஸ்ரீதேவி, சீரியல்களில் நடித்து வரும் நிலையில், கடந்த நவம்பர் மாதம் தான் 2-வது முறையாக கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தா. தனது மூத்த மகள் அக்காவாக ஆக போகிறாள் என்று வித்தியாசமாக அறிவித்த போட்டோஷூட் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து தற்போது சிப்பிளாக நடந்த வளைகாப்பு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.