சினிமா ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் விதத்தில், நடிகை நதியா மகள்களின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறார். தமிழ் சினிமாவில் 90களில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்தவர் நடிகை நதியா. மலையாளப் படங்களில் நடித்து வந்த நதியா, 1985 ஆம் ஆண்டு வெளியான பூவே பூச்சூடவா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
தொடர்ந்து ரஜினிகாந்த், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் உள்ளிட்ட டாப் நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றார். மலையாளத்தில் அறிமுகமாகியிருந்தாலும் நதியா தமிழில் தான் அதிகமான படங்களில் நடித்துள்ளார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கும் நதியா, குணச்சித்திர நடிகையாக மக்களின் மனதை கொள்ளையடித்தார். இவரது நடிப்பை தாண்டி நதியாவின் டிரெஸ்ஸிங் சென்ஸ், மேக்கப், ஹேர் ஸ்டைல் போன்றவற்றிற்காக இவருக்கு பெண் ரசிகைகளும் அதிகமாக இருந்தனர்.
தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த நதியா, கடந்த 1988ஆம் ஆண்டு சிரீஸ் காட்போல் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் இந்த காதல் ஜோடிக்கு சனம், ஜனா என இரண்டு மகள்கள் உள்ளனர். திருமணம் முடிந்த கையோடு அமெரிக்காவில் செட்டிலான நதியா, நடிப்புக்கு பிரேக் கொடுத்துவிட்டார்.நீண்ட நாட்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்த நதியா, 2004 ஆம் ஆண்டு வெளியான எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி என்ற படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்தார். தொடர்ந்து நதியா குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் கலக்கி வருகிறார். ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்தாலும் நதியா தற்போது வரை இளமையாகவே இருந்து வருகிறார்.