லியோ வெளியாகி வெறும் 6 நாட்ளில், ரூ. 250 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிக எதிர்பார்புக்கு மத்தியில் கடந்த 19ம் தேதி லியோ திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் வெளியான முதல் நாளில் இந்தியா முழுவதிலும், ரூ.64 கோடி வசூல் செய்தது. இரண்டாம் நாளில் ரூ. 35 கோடியும், முன்றாம் நாளில் ரூ. 39 கோடியும் வசூல் செய்தது. நான்காம் நாளில் ரூ. 41 கோடி மற்றும் 5ம் நாளில் ரூ.35 கோடி வசூல் செய்தது.
விஜயதசமி நாளான நேற்று 65 % பேர் லியோ படத்தை பார்க்க திரையரங்கிற்கு வந்துள்ளனர். கேரளாவில் லியோ படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. கேரளாவில் நேற்று மட்டும் லியோ திரைப்படம் ரூ. 5 கோடி வசூல் செய்துள்ளது. வடமாநிலங்களில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் லியோ வெளியாகவில்லை என்றாலும்கூட ரூ. 15 கோடி வசூலை அங்கு எட்டியுள்ளது.
இந்நிலையில் இதுவரை லியோ ரூ.248 கோடி வசூலை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தற்போது வசூல் ரூ.250 கோடியை தாண்டி சென்றிருக்கும் என்றும் கூறப்படுகிறது. வருகின்ற வெள்ளிக்கிழமைக்குள் லியோ ரூ.500 கோடி வசூலை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பொன்னியின் செல்வன் பார்ட்1, ஜெயிலர், 2.0-வை தொடர்ந்து வரலாற்றில் 4-வது பெரிய தமிழ் படமாக லியோ மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.