ஜெயிலர் படத்தில் நடித்த மலையாள நடிகர் விநாயகனை கேரள காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஜெயிலர் படத்தில் நடித்த மலையாள நடிகர் விநாயகனை கேரள காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் வில்லனாக மலையாள நடிகர் விநாயகன் நடித்துள்ளார். இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இதற்கு முன்பாக திமிரு, மரியான் படத்தில் நடித்துள்ளார். மலையாளத்தில் இவர் நடித்த கம்மாட்டிப்பாடம் படத்துக்கு மாநில அளவில் சிறந்த நடிகர் விருதை பெற்றார்.
இந்நிலையில் இவரை கேரள காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பில் பிரச்சனை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு அவர் காவல்நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அவர் மது போதையில் இருந்ததாகவும், அதனால் ரகளையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் அவரை மருத்துவ பரிசோதனைக்காக காவல் நிலையத்துக்கு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.