இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி தனது பிறந்தநாளான இன்று தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சச்சின் சாதனையை சமன் செய்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி தனது பிறந்தநாளான இன்று தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சச்சின் சாதனையை சமன் செய்துள்ளார்.
நடப்பு உலகக்கோப்பை தொடரில், விராட் கோலி 3 முறை சதத்தை நெருங்கி சதம் அடிக்காமல் அவுட் ஆகி தவறவிட்ட நிலையில், அவருடைய பிறந்த நாளான் இறு தனது 49-வது சதத்தை அடித்து அசத்தினார்.கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையே நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் 37வது போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து தொடக்க வீரர்காளக ரோஹித் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களத்தில் இறங்கினர். அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 24 பந்துகளில் 2 சிக்சர் 6 பவுண்டரியுடன் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சுப்மன் கில் 23 ரன்னில் அவுட் ஆனார். ஆனால், விராட் கோலி – ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி பொறுப்புடன் நிதானமாக விளையாடி ரன்களைக் குவித்தது. 87 பந்துகளை எதிர்கொண்ட ஷ்ரேயாஸ் 2 சிக்சர் மற்றும் 7 பவுண்டரியுடன் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மறுமுனையில், நிலைத்து சிறப்பாக விளையாடியா விராட் கோலி தனது 49-வது சதத்தை தனது பிறந்த நாளில் அடித்து அசத்தினார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 49 சதங்கள் அடித்த சச்சின் சாதனையை விராட் கோலி இன்று சமன் செய்துள்ளார்.