சீத்தா பழத்தில் பல நன்மைகள் இருக்கிறது. இதில் உள்ள பண்புகள், நுரையீரல் ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கிறது. மேலும் நுரையீரலை மாசுப்படுத்தும் விஷயங்கள் வெளியேற்றுகிறது.
சீத்தா பழத்தில் பல நன்மைகள் இருக்கிறது. இதில் உள்ள பண்புகள், நுரையீரல் ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கிறது. மேலும் நுரையீரலை மாசுப்படுத்தும் விஷயங்கள் வெளியேற்றுகிறது.சீத்தா பழத்தில் வைட்டமின் பி6 உள்ளது. இது வீக்கத்திற்கு எதிராக செயல்படுகிறது. மூச்சுக்குழாய்களில் உள்ள வீக்கத்தை குணப்படுத்தும். ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் சீத்தா பழத்தை எடுத்துகொள்ளலாம்.
இதில் உள்ள வைட்டமின் பி6 சத்து, தடையின்றி மூச்சுவிட உதவுகிறது.இதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட், பைடோ நியூட்டிரியன்ஸ் நச்சுகளை வெளியேற்றுகிறது. நமது சுவாச மண்டலத்தில் இருந்து, மாசுபடுத்தும் பொருட்களை வெளியேற்றுகிறது. இது சுவாசப் பாதையை சுத்தம் செய்கிறது, இதனால் நுரையீரல் செயல்பாடு அதிகரிக்கும்.சுற்றுச் சூழலால் பாதிக்கப்படும் உங்கள் நுரையீரலை இது காப்பாற்ற உதவுகிறது. இதில் உள்ள வீக்கத்திற்கு எதிரான பண்பு, சுவாச மண்டலத்தில் உள்ள நஞ்சுகளை வெளியேற்றுகிறது. சுற்றுச் சூழலில் உள்ள மாசுபாட்டை , உடல் எதிர்த்து போராடவும் இது உதவுகிறது.
சர்க்கரை நோயாளிகள், இதை பார்த்து எடுத்துகொள்ள வேண்டும். இதில் இருக்கும் சர்க்கரை, ரத்த குளுக்கோஸ் அளவை அதிகரிக்கலாம். இதனால் இதை பார்த்து எடுத்துகொள்ள வேண்டும்.