சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் உலகம் முழுவதும் இன்று பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கும் "அயலான்" திரைபடத்தின் முழு விமர்சனத்தை இங்கே காணலாம்.
வேற்றுகிரகத்தில் இருந்து எதிர்பாராத விதமாக சிதறிய அதிசக்திவாய்ந்த கல் ஒன்று பூமியில் விழுகிறது. அந்தக் கல் வில்லனிடன் சிக்க, அதைவைத்து நச்சு வாயுவை கசியவிட்டு மக்களை அழிக்க திட்டமிடுகிறான் வில்லன். அந்த கல்லை தேடி பூமிக்கு ஒரு ஏலியன் வருகிறது. ஏலியன் நாயகன் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து அந்த கல்லை தன் கிரகத்திற்கு எடுத்துச் சென்று பூமியை காப்பாற்றியதா? இல்லையா? என்பதே கதை.
பல முன்னணி நடிகர்கள் நடிக்க தயங்கும் ஒரு புது முயற்சியை கையில் எடுத்து, பல தடைகளுக்குப் பிறகு மக்களிடையே படத்தை கொண்டு சேர்த்திருக்கும் சிவகார்த்திகேயனுக்கு பெரிய பாராட்டுக்கள். காமெடி, ஆக்சன், சென்டிமென்ட், நடனம் என எல்லா ஏரியாவிலும் தன்னுடைய இயல்பான நடிப்பால் ரசிகர்களை மீண்டும் ஒரு முறை கவர்ந்திருக்கிறார்.
அவரும் ஏலியனும் சேர்ந்து செய்யும் சேட்டைகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் விதமாக அமைந்திருக்கிறது. அவரின் எதார்த்த நடிப்பு ஒரு முன்னணி நடிகர் என்ற பிம்பத்தை உடைத்து நம்மில் ஒருவராக சிவகார்த்திகேயனை நினைக்க வைக்கிறது