விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, செழியனிடம் இருந்து ஜெனிக்கு விவாகரத்து பெற்று தர வேண்டும் என்று மும்பரமாக இருக்கும் ஜோசப், செழியன் ஜெனியை கொடுமைபடுத்தியதாகவும், பல அடுக்கடுன்னாக குற்றச்சாட்டுக்களை வக்கீலிடம் சொல்கிறார். மேலும் தனது மகள் பாக்யா குடும்பத்தின் மீது பாசமாக இருப்பதை விரும்பாத ஜோசப், நாளைக்கு செழியன் உன்மீது பல பழி சுமத்துவன் அப்போ நீ என்ன பன்றனு பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு செல்கிறான்.
இந்த பக்கம், பாக்யா வீட்டுக்கு வரும் செழியனின் வக்கீல், ஜெனி குடும்பத்தினர் கூறிய குற்றச்சாட்டுக்களை சொல்ல, ஈஸ்வரி அவர்கள் மீது பல குற்றச்சாட்டுகளை சொல்கிறார். ஆனால் இதை கேட்ட செழியன் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை சார். ஜெனி மீது எந்த தப்பும் இல்லை நான் அவள் மீது எந்த குற்றச்சாட்டும் சொல்லவில்லை இதை நீங்கள் நாளை கோர்ட்டில் சொல்லிவிடுங்கள் என்று சொல்கிறார்.
இதை கேட்ட வக்கீல், அப்போ அவங்க பக்கம் நியாயம் இருக்கிறது என்று சொல்லி விவாகரத்து கொடுத்துவிடுவார்கள் என்று சொல்ல, செழியன் பரவாயில்லை என்று சொல்கிறான். இதை கேட்ட ஈஸ்வரி என்னமோ பண்ணுங்க. ஆனா குழந்தை நம்ம வீட்டுக்கு வரனும் என்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறாள். இதற்கிடையில் கோபியை வழியில் பார்க்கும் ராதிகா ஆபீஸ் ஏன் பூட்டி இருக்கு என்று கேட்க, நான் க்ளைண்டை பார்க்க போனேன். ஆபீஸில் எல்லாம் ஒரு பங்ஷன் போய்ருக்காங்க என்று சொல்கிறான்.
உன்னை பார்க்க வருகிறேன் என்பதால் நான் பங்ஷன் போகவில்லை என்று கோபி சொல்ல, ராதிகாவும் அதை நம்பிவிடுகிறார். அதன்பிறகு எழில், அமிர்தா இருவரும் கோவில் போக, கணேஷ் பின்னாடியே வருகிறான். அவனை பார்த்த எழில், அமிர்தாவை உள்ளே அனுப்பிவிட்டு, கணேஷை எச்சரிக்கிறான். ஆனால் அமிர்தாவும் என் குழந்தையும் கிடைக்கும் வரை நான் வந்துகொண்டே இருப்பேன் என்று சொல்கிறான் கணேஷ்.