ஆந்திராவில் 2 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 19 பயணிகள் உயிரிழந்தனர். அருகில் உள்ள தாலுகா மற்றும் மாவட்டங்களில் இருந்து ஆம்புலன்ஸ்கள் விரைந்து செல்ல முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
ஆந்திராவில் இரு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் 19 பயணிகள் உயிரிழந்தனர். இந்த விபத்தில் “விசாகப்பட்டினம்-பலாசா பயணிகள் ரயில் மற்றும் விசாகப்பட்டினம் ராயகுடா பயணிகள் ரயில்” சிக்கியதாக தென்னக கடற்கரை ரயில்வே மண்டல அதிகாரி தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த விபத்தில் சில உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார் ஆனால் உடனடியாக தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை.தற்போது பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் உள்ளூர் நிர்வாகி அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். விபத்தில் 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.
மேலும் உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. விபத்தானது விஜயநகரம் கந்தகப்பள்ளி அருகே ஏற்பட்டுள்ளது. இது குறித்து அறிந்ததும், “விபத்தில் சிக்கியவர்களுக்கு முதல் உதவிகளை உறுதிசெய்யுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டார்.தொடர்ந்து, அருகில் உள்ள தாலுகா மற்றும் மாவட்டங்களில் இருந்து போதுமான அளவு ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்துக்கு விரைவதையும் உறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
விபத்தில் சிக்கிய நபர்களுக்கு அனகபள்ளியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்ப்டடுவருகிறது. அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதுடன் உடனுக்குடன் தகவல்கள் தெரிவிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி இரங்கல்
இந்த ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ரயில்வே அமைச்சர் வைஸ்ணவ் விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
மேலும் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தள்ள ஆந்திரா முதல் அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, உயிரிழந்தோருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.