இந்திய சினிமாவின் இரண்டு ஜாம்பவான்களான ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் இணைந்து தலைவர் 170 படத்தில் நடித்தபோது எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
தலைவர் 170 படத்தில் ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் இணைந்து நடித்துள்ளனர். இந்திய சினிமாவின் இரண்டு ஜாம்பவான்களும் 33 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இந்திய சினிமாவின் இரண்டு ஜாம்பவான்களான ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் இணைந்து தலைவர் 170 படத்தில் நடித்தபோது எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
இயக்குனர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்துக்கு தற்காலிகமாக ‘தலைவர் 170’ என பெயரிடப்பட்டுள்ளது. ‘தலைவர் 170’ திரைப்படத்தில் 33 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய சினிமாவின் இரண்டு பழம்பெரும் நடிகர்கள் உச்ச நட்சத்திர நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் ஒன்றாக நடிப்பதால் இந்த படம் ரசிகர்களுக்கு உற்சாகத்தையும் கொண்டாட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ஆகிய இரு பெரும் ஜாம்பவான்கள் சேர்ந்து நடிப்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் சேர்ந்து நடித்துள்ள மும்பையில் நடந்த படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்ததாக லைகா புரொடக்ஷன்ஸ் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.லைகா புரொடக்ஷன்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில், “சூப்பர் ஸ்டாரும் ஷாஹேன்ஷாவும் 33 ஆண்டுகளுக்குப் பிறகு #தலைவர்170 படத்தில் திரையில் மீண்டும் இணையும் போது சந்தித்தபோது, #Thalaivar170 படம் இரண்டு ஜாம்பவான்களின் டபுள் டோஸாக இருக்கும்” என்று பதிவிட்டுள்ளது.
முன்னதாக, ரஜினிகாந்த் மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு, அமிதாப் பச்சனுடன் மீண்டும் சேர்ந்து நடிப்பதில் தனது மகிழ்ச்சியை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தினார். அவர் எழுதினார், “33 ஆண்டுகளுக்குப் பிறகு, த.செ. ஞானவேல் இயக்கத்தில் லைகாவின் தயாரிப்பில் ‘தலைவர் 170’ பாத்தில் எனது வழிகாட்டியான ஸ்ரீ அமிதாப் பச்சனுடன் மீண்டும் பணியாற்றுகிறேன். என் இதயம் மகிழ்ச்சியில் நிரம்பி வழிகிறது” என்று பதிவிட்டிருந்தார்.
இந்திய சினிமாவின் இந்த இரண்டு ஜாம்பவான்களூம் இதற்கு முன்னர், ஹம், அந்தா கானூன் மற்றும் ஜெராப்தார் போன்ற ஆகிய படங்களில் ஒன்றாக சேர்ந்து நடித்துள்ளனர். அவர்களின் கடைசி கூட்டணியான ஹம் 1991-ல் வெளியானது. இப்போது, 33 ஆண்டுகளுக்குப் பிறகு, தலைவர் 170 படத்துக்காக இரண்டு ஜாம்பவான்கள் மீண்டும் இணைந்துள்ளனர். ஜெய் பீம் படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குனர் த.செ. ஞானவேல் தலைவர் 170 படத்தை இயக்குகிறார்.
தலைவர் 170 படத்தில், சூப்பர் ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் உடன் மஞ்சு வாரியர் மற்றும் ஃபஹத் பாசில் உட்பட மலையாளத் திரையுலகில் இருந்து ஒரு நடிகர்கள் பட்டாள்ம் இணைந்துள்ளது. அதே போல, தெலுங்கு நட்சத்திரம் ராணா டக்குபதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இப்படம் 2024-ம் ஆண்டின் மத்தியில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.