ஜியோ நிறுவனம் முதல் முறையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட் கிளாஸ் (ஜியோ கிளாஸ்) அறிமுகம் செய்துள்ளது. ஏ,ஆர் மற்றும் வி.ஆர் வசதிகளுடன் ஜியோ கிளாஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட் கிளாஸ், ஜியோ கிளாஸை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஜியோ கிளாஸ் ஒரு மிக்ஸ்டு-ரியாலிட்டி ஹெட்செட் ஆகும். அதாவது இது விர்ச்சுவல் மற்றும் நிஜ உலகம் இரண்டையும் ஒருங்கிணைத்து மிகவும் ஆழமான அனுபவத்தை வழங்குகிறது. இரு உலகங்களிலும் சிறந்ததை வழங்க, ஆக்மென்டட் ரியாலிட்டி மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி இரண்டின் கலவையைப் பயன்படுத்துகிறது.
சிறப்பம்சங்கள், பயன்பாடு
ஜியோ கிளாஸ் 100-இன்ச் FHD மைக்ரோ-லெட் 3D டிஸ்ப்ளே மற்றும் வாய்ஸ் மற்றும் கேஸ் இன்டராக்ஷன் கொண்ட இலகுரக ஸ்மார்ட் கிளாஸ் ஆகும். 174 மிமீ நீளம், 155 மிமீ அகலம் மற்றும் திறந்திருக்கும் போது 38 மிமீ உயரம் கொண்ட ஜியோகிளாஸ் சிறியதாகவும், காம்ப்பேக்டாகவும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கேபிள் மற்றும் விசர் இல்லாமல் வெறும் 69 கிராம் எடையைக் கொண்டுள்ளது, இது நீண்ட நேரம் பயன்படுத்துவதற்கு உதவுகிறது.
உங்கள் ஸ்மார்ட்ஃபோன், லேப்டாப், கேமிங் கன்சோல் அல்லது டைப்-சி டிஸ்ப்ளே அவுட்புட் கொண்ட வேறு எந்த கேஜெட்டாக இருந்தாலும், உங்கள் ஜியோகிளாஸ் ஏஆர் ஸ்மார்ட் கிளாஸுடன் எந்த சாதனத்தையும் தடையின்றி இணைக்கலாம் மற்றும் உள்ளடக்கத்தை 100-இன்ச் விர்ச்சுவல் ஸ்கிரீனில் ஸ்கிரீன்காஸ்ட் செய்யலாம்.
இம்மர்சிவ் மோட், ஏ.ஆர் காஸ்ட், விர்ச்சுவல் டெஸ்க்டாப் மானிட்டர் மற்றும் விர்ச்சுவல் பிசி போன்ற அம்சங்களுடன் ஜியோகிளாஸ் வருகிறது. கூடுதலாக, சாதனம் -1.5 முதல் -5 வரையிலான லென்ஸ் உடன் இணக்கமான காந்த லென்ஸ் பிரேம்களுடன் வருகிறது, இது தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் வசதியான பார்வை அனுபவத்திற்காக பயன்படுத்தலாம்.