பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரமோவில் அர்ச்சனா நிக்சனுக்கு எதிராக உரிமை குரல் எழுப்பிய நிலையில், கமல்ஹாசன் ஒரு நிமிடம வேட்டையாடு விளையாடு ராகவன் கேரக்டரை பிரதிபலிக்கும் விதமாக பேசியது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் நாள் தோறும் பெரும் சண்டை வெடித்து வருகிறது. இதில் மாயா நிக்சன் பூர்ணிமா ஆகியோர் ஒரு கேங்காவும், விசித்ரா அர்ச்சனா ஆகியோர் மற்றொரு கேங்காவும் மோதிக்கொண்டுள்ளனர். இதில் அவ்வப்போது ஒருவர் குறித்து மற்றொருவர் புரளி பேசுவதும், ஆக்ரோஷமாக சண்டை போடுவதும் என் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டை பரபரப்பாக வைத்துள்ளனர்.
இடையில் பிக்பாஸ் கொடுத்த பூகம்பம் டாஸ்கின்போது மாயா விசித்ரா இருவரும் இணைந்த நிலையில், ஒன்றாக சுற்றி வந்த அர்ச்சனா விசித்ராவுக்கு எதிரியாக மாறிவிட்டார். கடந்த சில வாரங்களாக அர்ச்சனா சக போட்டியாளர்களுக்கு நிகராக ஆக்ரோஷமாக நடந்துகொண்டாலும் அவரை அழ வைக்க வேண்டும் என்று பலரும் முயற்சி செய்து வருகின்றனர்.இதில் நேற்றைய எபிசோட்டில், அர்ச்சனாவின் மாதவிடாய் குறித்து விசித்ரா கூறிய கருத்து இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பலரும் விசித்ராவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் அர்ச்சனா உரிமை குரல் எழுப்பியுள்ளார்.
கடந்த வாரம் அர்ச்சனாவிடம் தரக்குறைவாக பேசிய நிக்சனுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அவர் சொருவிடுவேன் என்று பயன்படுத்திய வார்த்தைக்கு பலரும் விமர்சனங்களை எழுப்பி வந்தனர். இதனிடையே வார இறுதி நாளான இன்றைய ப்ரமோவில் நிக்சனுக்கு எதிராக அர்ச்சனா உரிமை குரல் எழுப்பியுள்ளார்.