அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/BlhTGJzur1ZeFGOxGrS1.jpg)
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகமாகி உள்ளது. மேலும் சென்னையில் கடந்த 15 நாட்களில் டெங்கு காய்ச்சலால் சிலர் மரணமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் சென்னையில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணியின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று அதிகளவில் இருமல் மற்றும் காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நள்ளிரவு 1 மணியளவில் தங்கமணி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியபட்டது. இந்நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.