தீபாவளிக்கு பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கக்கோரி சென்னை மற்றும் சென்னை புறநகர் பட்டாசு வியாபாரிகள் நலச் சங்கத்தினர் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்டனர்.

தீபாவளி பண்டிகை வருகின்ற 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்கப்படும். இந்நிலையில் தற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதி அளிக்கக்கோரி சென்னை மற்றும் புறநகர் பட்டாசு வியாபாரிகள் நலச்சங்கத்தினர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீட்டின் முன்பு கூடி போராட்டம் நடத்தினர். 30-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. எல்லா ஆண்டும் தற்காலிக பட்டாசு கடை அமைக்க அனுமதி வழங்கப்படும். இந்த ஆண்டு தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க இதுவரை அனுமதி வழங்கவில்லை. இதனால் பட்டாசு வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தீயணைப்புத் துறையிடம் இதற்காக விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டும் அனுமதிக்காக காத்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.