2015-ம் ஆண்டு வெள்ளத்தால், ஏற்பட்ட குப்பைகளை அரசியல் வாதிகளும், தன்னார்வலர்களும் அகற்றினார்கள் என்றும் அதிமுக ஒன்றும் செய்யவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ”இரவு,பகல் பாராமல் மேயர் வேலை செய்கிறார். தண்ணீரில் தொடர்ச்சியாக அலைந்து வேலை செய்வதால் அவருக்கு உடல் நிலை சரியாக இல்லாமல் போனது. தற்போது நன்றாக இருக்கிறார். வெளிமாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் மாநகராட்சிகளில் இருந்து 5,000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் உபகரணங்கள் மற்றும் வாகனங்களோடு வந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
2015ம் ஆண்டு வெள்ளம் வடிந்த பின்பு, யாரும் குப்பைகளை நீக்கவில்லை. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள்தான், குப்பைகளை நீக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது நாங்கள் 300 தோழர்கள் இறந்த பூனை போன்ற கழிவுகளை அகற்றினோம். நாங்கள் அகற்றும் செய்தி வெளியானது. மேலும் அப்போது ஜி. கே வாசன், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களை குப்பையை நீக்கினார்கள்.
ஆனால் இப்போது யாரும் அப்படி பணி செய்ய வேண்டாம். மாநகராட்சி ஊழியர்களே பார்த்துகொள்கிறார்கள். சென்னையை பொறுத்தவரை கட்டிய வடிகால் மழை நீர் சென்றுள்ளது. சென்னையில் உள்ள முக்கிய 4 நீர் நிலைகளில் உள்ள தண்ணீரை கடல் உள்வாங்கவில்லை. இதனால் ஒரு நாள் முழுவதும் மழை நீர் கடலுக்கு செல்லவில்லை. மழை நின்ற உடனே இந்த நீர், கடலுக்கு சென்றுள்ளனது. தாழ்வான பகுதிகளில் உள்ள நீரை மோட்டர்கள் மூலம் வெளியேற்றி வருகிறோம்.
சென்னையில் ஆக்கிரமிப்புகள் எங்கே இருக்கிறது. அதை பார்த்துவிட்டு சொல்லவும். வேளச்சேரி, பள்ளிக்கரணை, மடிபாக்கம், முல்லகரம் ஆகியவை பாதிக்கப்பட்டதற்கு காரணம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கிற 40-க்கும் மேற்பட்ட ஏரிகளின் உபநீர் வருவதால் . கடந்த பருவ மழையை காட்டிலும் 10 முதல் 13 % கூடுதலாக இந்த ஆண்டு மழை பெய்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ரூ. 6,000 வழங்க உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.