100வது சுதந்திர தினத்தை கொண்டாடும் அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டை வளர்ந்த நாடாக மாற்ற மத்திய அரசு செயல்பட்டு வருகிறது; துடிப்பான குஜராத் உலக உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உறுதி.காந்திநகரில் நடைபெற்ற துடிப்பான குஜராத் உலக உச்சி மாநாட்டின் 10வது பதிப்பை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 100வது சுதந்திர தினத்தை கொண்டாடும் அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டை வளர்ந்த நாடாக மாற்ற மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.
“சமீப காலத்தில், இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்தது. இப்போது, அடுத்த 25 ஆண்டுகளுக்கு தனது இலக்கை நோக்கி இந்தியா செயல்பட்டு வருகிறது. சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் நேரத்தில் அதை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை நாங்கள் கொண்டுள்ளோம். எனவே, இந்த 25 ஆண்டுகள் இந்தியாவின் அமிர்த கலாம்,’’ என்று பிரதமர் கூறினார்.
இந்த அமிர்த காலத்தில் நடைபெறும் முதல் துடிப்பான குஜராத் உலகளாவிய உச்சி மாநாடு இதுவாகும். எனவே, இது இன்னும் முக்கியமானது. இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்கும் 100க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள், இந்தியாவின் இந்த வளர்ச்சிப் பயணத்தில் முக்கியமான பங்காளிகள்” என்று மோடி கூறினார்.மோடியின் வெற்றிக் கதையில் இந்த உச்சிமாநாடு முக்கியப் பங்காற்றியுள்ளது.