அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில், இம்மாத இறுதியில் கும்பாவிஷேகம் நடைபெற உள்ள நிலையில், ராமர் கோவிலுக்கு அருகில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நிலம் வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் குறித்து இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், எதிர்கட்சிகள் பாஜகவின் அரசியல் என விமர்சனம் செய்து வருகிறது. ஆனாலும், ராமர் கோவில் கும்பாவிஷேகம் குறித்து மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனிடையே, பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் அயோத்தியில் உள்ள 7-நட்சத்திர என்கிளேவ் தி சரயுவில் ப்ளாட்டை வாங்கியுள்ளார்.
இது மும்பையை தலைமையிடமாக கொண்ட தி ஹவுஸ் ஆஃப் அபிநந்தன் லோதா (HoABL) மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்து தி ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, அயோத்தியில் நடிகர் அமிதாப் பச்சன் வாங்கியுள்ள 10,000 சதுர அடி இடத்தின் மதிப்பு சுமார் 14.5 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
"என் இதயத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்திருக்கும் நகரமான அயோத்தியில் உள்ள சரயுவுக்காக அபிநந்தன் லோதா மாளிகையுடன் இந்த பயணத்தைத் தொடங்க ஆவலுடன் காத்திருக்கிறேன். அயோத்தியில் காலத்தால் அழியாத ஆன்மீகம் மற்றும் கலாச்சார செழுமை உள்ளது. புவியியல் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு உணர்வுபூர்வமான தொடர்பை உருவாக்கியுள்ளது.