‘மிக்ஜாம்’ புயல்’ ஆந்திராவின் நெல்லூர்- மசூலிபட்டினத்திற்கு இடையே டிசம்பர் 5-ம் தேதி கரையை கடக்க உள்ள நிலையில், சென்னைக்கு அதி கனமழை பொழியும் என்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் சென்னைக்கு கிழக்கு-வடகிழக்கே சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ‘மிக்ஜாம்’ புயல்’ ஆந்திராவின் நெல்லூர்- மசூலிபட்டினத்திற்கு இடையே நாளை டிசம்பர் 5-ம் தேதி கரையை கடக்கிறது. இதனால், சென்னைக்கு அதி கனமழை பொழியும் என்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் சென்னைக்கு கிழக்கு-வடகிழக்கே சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ‘மிக்ஜாம்’ புயல்’ தமிழ்நாட்டில் 21 இடங்களில் அதி கனமழையும், 59 இடங்களில் மிக கனமழை, 15 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. அடுத்து வரும் இரு தினங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
விலகியது சென்னைக்கு ரெட் அலர்ட்
சென்னை மாவட்டத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் விலக்கி கொள்ளப்பட்டது. மிக் ஜாம் புயல் சென்னையை விட்டு மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து விலகிச் செல்லும் நிலையில், படிப்படியாக மழை குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மிக்ஜாம் புயல் திருவள்ளூரை நோக்கி சென்றுள்ளதால், திருவள்ளூர் மாவட்டத்திற்கு, அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.