சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் துணை முதலமைச்சர் பதவி குறித்து கேட்கப்பட்டது. இது தொடர்பாக செய்தியாளர், “அந்த துணை முதலமைச்சர் பதவி எனக் கேள்வியெழுப்பினார். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மகனும், விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 46ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.
அவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கு திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவருக்கு நடிகர் கமல்ஹாசன், பாடலாசிரியர் வைரமுத்து, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் போல் உதயநிதியின் இன்றைய பிறந்தநாளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் துணை முதலமைச்சர் பதவி குறித்து கேட்கப்பட்டது. இது தொடர்பாக செய்தியாளர், “அந்த துணை முதலமைச்சர் பதவி எனக் கேள்வியெழுப்பினார்.
இதற்கு புன்முறுவலுடன் பதிலளித்த உதயநிதி, “ஏங்க அது உங்க கோரிக்கை” என்றபடி நகர்ந்து சென்றார். உதயநிதிக்கு கமல்ஹாசன் அன்புத் தம்பி எனவும், கி வீரமணி ஜீவநதி எனவும் வைரமுத்து தெளிவாய் உள்ளது கொள்கை, திடமாய் உள்ளது இயக்கம், ஒளியாய் உள்ளது பாதை, உழைப்பதுதான் உன் வேலை, பின்னோரை முன்னேற்ற முன்னோரைப் பின்பற்று, உதயநிதிக்கு இதய வாழ்த்து” எனத் தெரிவித்துள்ளார்.