சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
புயல், மழை பாதிப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். சென்னை செண்ட்ரல் கண்ணப்பர் திடலில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். நிவாரண முகாமில் உள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். வருவாய், பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர், சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
நேற்று முன்தினம் கனமழை பெய்த போதும் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். பேரிடர் கட்டுபாட்டு அறை மற்றும் பாதிக்கப்பட்ட இடங்களை அவர் அப்போது ஆய்வு செய்தார். சென்னை மாநகரம் வரலாறு காணாத மழையை சந்தித்துள்ளது. நேற்று இரவுதான் மழை நின்றது என்பதால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இந்நிலையில் தேங்கி இருக்கும் மழை நீரை போர்கால அடிப்படையில் அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மழை நீரை அகற்றும் பணிகளையும் முதலமைச்சர் தொடர்ந்து ஆய்வு செய்ய உள்ளார். சென்னை பொறுத்தவரை 50 மேற்பட்ட நிவாரண முகாம்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.