மிக்ஜாம் புயல் நிவாரண பணிக்கு சென்னைக்கு திருச்சி மாநகராட்சி மூலம் 250 தூய்மை பணியாளர்கள் ஐந்து பேருந்துகள் மூலம் சென்னைக்கு திங்கள்கிழமை மாலை அனுப்பி வைக்கப்பட்டனர்.
மிக்ஜாம் புயல் நிவாரண பணிக்கு சென்னைக்கு திருச்சி மாநகராட்சி மூலம் 250 தூய்மை பணியாளர்கள் மற்றும் 10 தூய்மை பணி மேற்பார்வையாளர்கள், மூன்று சுகாதார அலுவலர்கள் வெள்ள தடுப்பு உபகரணங்களுடன் ஐந்து பேருந்துகள் மூலம் இன்று மாலை அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில் மேயர் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையர் மரு.இரா.வைத்திநாதன் ஆகியோர் பங்கேற்று பணிக்கு செல்வோரின் வாகனங்களை கொடி அசைத்து வழி அனுப்பி வைத்தனர்.
இந்த நிகழ்வில் மண்டலத் தலைவர் துர்கா தேவி, நகர் நல அலுவலர் மணிவண்ணன், மாநகராட்சி உதவி ஆணையர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.