மக்களவை பாதுகாப்பு மீறல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் அமளி துமளியில் ஈடுபட்ட நிலையில் தமிழக எம்.பி. கனிமொழி, ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட எம்.பி.க்கள் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நாடாளுமன்ற மக்களவையில் தொடர் அமளி காரணமாக கனிமொழி உள்பட எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். குளிர்கால கூட்டத் தொடர் நாளை (டிச.15) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடரில் அமளியில் ஈடுபட்டதாக கூறி திமுகவின் கனிமொழி, காங்கிரஸின் மாணிக்கம் தாகூர், சு. வெங்கடேசன், நடராஜன், முகம்மது ஜாவித் உள்ளிட்ட எம்.பி.க்கள் இன்று (டிச.14) சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இவர்கள் இந்தக் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மக்களவையில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.இந்த நிலையில், கனிமொழி, ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், சு. வெங்கடேசன் உள்ளிட்டவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக கனிமொழி, “எம்.பி.க்கள் வருவதற்கு கட்டுப்பாடுகள் இருக்கும்போது இவர்கள் எப்படி வந்தார்கள்? இந்தத் தாக்குதல் எப்படி நடந்தது?இது திட்டமிட்ட தாக்குதல் போல் தெரிகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்” எனக் கூறினார். தொடர்ந்து, கலர் புகை குண்டு வீசிய போது நான் மக்களவைக்குள் இருந்தேன். திடீரென சத்தம் கேட்டபோது ஒருவர் மேஜைகள் மீது ஏறி ஓடினார்” என்றார்.