சென்னையில் நடந்த டுவல்த் ஃபெயில் படத்தின் சிறப்பு காட்சியை பார்த்து ரசித்த நடிகர் கமல்ஹாசன் படம் குறித்து தனது கருத்தை ஒரு வீடியோ கிளிப்பில் பகிர்ந்து கொண்டார்.
இந்தியில் அடுத்து வெளியாக உள்ள டுவல்த் ஃபெயில் என்ற படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த நடிகர் கமல்ஹாசன் படத்திற்கு பாராட்டு தெரிவித்து தனது எண்ணங்களை வீடியோ பதிவுகள் மூலம் வெளியிட்டுள்ளார்.
இந்தியில் சஞ்சய் தத் நடிப்பில் முன்னா பாய் எம்.பி.பி.எஸ், அமீர்கான் நடிப்பில் பிகே. உள்ளிட்ட படங்களை தயாரித்த வினு வினோத் சோப்ரா தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் டுவல்த் ஃ.பெயில். விக்ராத் மான்சி, பல்லக் லால்வானி ஆகியோர் இணைந்து நடித்துள்ள இந்த படம் வரும் அக்டோபர் 27-ந் தேதி வெளியாக உள்ளது. இதனிடையே இந்த படத்தின் சிறப்பு காட்சி என்.எஃப்.டி.சி திரையரங்கில் திரையிடப்பட்டது.
படத்தை பார்த்தவர்கள் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை தெரிவித்து வரும் நிலையில், சென்னை, தாகூர் பிலிம் சென்டர் என்.எஃப்.டி.சி (NFDC) நடைபெற்ற சிறப்பு காட்சியை பார்த்த நடிகர் கமல்ஹாசன் படத்தின் விமர்சனம் மற்றும் இந்த படம் குறித்து தனது எண்ணங்களை வெளியிட்டுள்ளார். அதன்படி தற்போது கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்,
“நமஸ்தே, நான் சென்னையில் உள்ள என்.எஃப்.டி.சி (NFDC) தியேட்டரில் இருந்து பேசுகிறேன், அங்கு எனது நண்பர் திரு விது வினோத் சோப்ராவின் டுவல்த் ஃபெயில் படம் பார்த்தேன். யாரோ ஒருவர் உங்கள் நண்பர் என்று சொல்வதில் பெருமிதம் கொள்ளும் சந்தர்ப்பங்கள் இவை. படம் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. படத்தைப் பார்த்தவர்களில் பெரும்பாலானோர் சொல்ல ஒரே ஒரு விஷயமே இருந்தது:
‘ரொம்ப நாளாக இப்படி ஒரு நல்ல படத்தைப் பார்த்தோம்.’ அதை நான் இரண்டாவது இடத்தில் சொல்ல விரும்புகிறேன். இப்படி ஒரு படத்தை உருவாக்கியதற்கு நன்றி வினோத் சோப்ரா. என்னைப் போன்ற திரைப்படத் தயாரிப்பாளர்கள் நம்பிக்கையுடன் முன்னேறி, நாங்கள் மிகவும் விரும்புவதைச் செய்ய இது நம்பிக்கையைத் தருகிறது. பரிந்தா மற்றும் 1942 எ லவ் ஸ்டோரி படங்களுக்கு பெயர் பெற்ற விது வினோத் சோப்ரா, மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு டுவல்த் ஃபெயில் என்ற படத்தை இயக்கி தயாரித்துள்ளார்.
இந்தப் படம் அதே பெயரில் அதிகம் விற்பனையான அனுராக் பதக் நாவலை அடிப்படையாகக் கொண்டது. இது ஐபிஎஸ் அதிகாரி மனோஜ் குமார் சர்மா மற்றும் ஐஆர்எஸ் அதிகாரி ஷ்ரத்தா ஜோஷியின் எழுச்சியூட்டும் கதை. படம் பற்றி பேசிய வினோத் சோப்ரா, நாட்டின் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இது மரியாதை என்று கூறியுள்ளார்.