தொல்லியல் துறை சார்ப்பில் அமைக்கப்பட்ட சிறப்பு குழு சம்பர்பித்த அறிக்கையில், கோவாவை போர்ச்சுகீஸ் ஆட்சி செய்தபோது 1000 கோவில்கள் இடிக்கப்பட்டதாக கூறப்படுள்ளது என்று அமைச்சர் சுபாஷ் பால் தேசாய் தெரிவித்துள்ளார்.
தொல்லியல் துறை சார்ப்பில் அமைக்கப்பட்ட சிறப்பு குழு சம்பர்பித்த அறிக்கையில், கோவாவை போர்ச்சுகீஸ் ஆட்சி செய்தபோது 1000 கோவில்கள் இடிக்கப்பட்டதாக கூறப்படுள்ளது என்று அமைச்சர் சுபாஷ் பால் தேசாய் தெரிவித்துள்ளார்.கோவாவை போர்சுகீஸ் ஆட்சி செய்த காலத்தில் 1000 கோவில்கள் இடிக்கப்பட்டதாகவும், இடிக்கப்பட்ட கோவில்களுக்கு பதிலாக நினைவுச்சின்னமாக ஒரு கோவில் கட்டலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் சுபாஷ் பால் தேசாய் தெரிவித்துள்ளார்.
இந்த சிறப்பு குழு ஜனவரி மாதத்தில் அமைக்கப்பட்டது. போர்ச்சுகீஸ் ஆட்சி செய்த காலத்தில் இடிக்கப்பட்ட கோயில்களை இருக்கும் இடத்தை கண்டறிந்து அங்கே மறுசீராமைக்கும் பணிகளை மேற்கொள்ள இந்த குழு அமைக்கப்பட்டது. 2022ம் ஆண்டு மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள கோவா அரசு ரூ.20 கோடியை ஒதுக்கியது.10 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில், கோவாவில் உள்ள திஸ்வாடி, பார்டெஸ், சால்சட்டி உள்ளிட்ட தாலுக்காகக்களில் உள்ள கோயில்கள்தான் பெரும்பான்மையாக இடிக்கப்பட்டுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் உள்ள மூத்த அதிகாரி கூறுகையில் “கோவில் இடிக்கப்பட்ட தளங்களை கண்டுபிடிக்கும் பொறுப்பு குழுவிற்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக 19 மனுக்கள் வந்துள்ளது. அதிக எண்ணிக்கையில் கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளதால், எல்லா கோவில்களையும் மீண்டும் கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அப்படி கோவில்களை மீண்டும் கட்ட இடங்கள் பெறுவதிலும் சிக்கல் உள்ளது. இதனால் நினைவுச்சின்னமாக ஒரு கோவிலை கட்டுவதுதான் சரியாக இருக்கும்” என்று கூறினார்.
மேலும் மற்ற இடங்களில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என்று சிறப்பு குழு தெரிவித்துள்ளது. திவார் தீவில் உள்ள சப்தகோடேஸ்வரர் கோவிலை புனரமைக்க பரிந்துரைகள் வந்துள்ளது குறிப்பிடதக்கது.