வீட்டில் வேலை செய்யும் ஒரு பெண்ணுக்கு இணையதளத்தில் எவ்வளவு ஃபாலோயர்கள் வேண்டும் என்று கேட்டு அதற்காக உதவி செய்துள்ளார் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜூன்.தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்கள் முக்கியமானவர் அல்லு அர்ஜூன். தற்போது புஷ்பா 2 என்ற படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவெ வெளியான இந்த படத்தில் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், 2-வது பாகத்திற்காக எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படம் அடுத்து ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே தெலுங்கான மாநிலத்தின் இன்று சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. தெலுங்கு திரையுலகின் நட்சத்திரங்கள் பலரும் வரிசையில் நின்று வாக்களித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், வீட்டில் இருந்து வேலை பார்க்கும் ஒரு பெண்ணின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு அதிகமான ஃபாலோயர்கள் வருவதற்கு நடிகர் அல்லு அர்ஜூன் உதவி செய்துள்ளார்.
இது தொடர்பாக வெளியாகியுள்ள ஒரு வீடியோ பதிவில், உங்களுக்கு எத்தனை ஃபாலேயர்கள் இருக்கிறார்கள் என்று கேட்க, அவர் 13 ஆயிரம் என்று பதில் அளிக்கிறார். இப்போது எத்தனை தேவை என்று கேட்க, 30 ஆயிரம் என்று பதில் அளிக்க அல்லு அர்ஜூன் சிரிக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.