நடிகர் விஜயகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப ஒன்று சேர்ந்து பிரார்த்தனை செய்வோம் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். நடிகர் விஜயகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப ஒன்று சேர்ந்து பிரார்த்தனை செய்வோம் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
தேதிமுதிக தலைவர் விஜயகாந்த காய்ச்சல் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் அவரது உடல் சீராக இல்லை என்றும் 14 நாட்கள் சிகிச்சை தேவை என்று அறிக்கை வெளியிட்டுருந்தது.இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டுள்ளது. திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதால் அவரது குடும்பத்தினருடன் மருத்துவக் குழு அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது. விஜய்காந்துக்கு கூடுதல் ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு அவரது உடல்நிலை தீவிரமாக கண்காணிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப ஒன்று சேர்ந்து பிரார்த்தனை செய்வோம் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். ” தேமுதிக தலைவரும், நெருங்கிய நண்பருமான திரு.விஜயகாந்த் அவர்கள் பலமுறை மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்று, உடனடியாக திரும்பி இருக்கிறார்கள். ஆனால், கடந்த 18ந்தேதி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்று அனுமதிக்கப்பட்ட கேப்டன் அவர்கள் நலம் பெற்று திரும்புவார் என்றிருந்த போது, அவரது உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் சீரான நிலையின்றி, நுரையீரல் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் வெளியிட்ட அறிக்கை மிகுந்த மனவேதனை அளிக்கிறது.மக்கள் நலனுக்காக பல்வேறு நற்பணிகளை மேற்கொண்ட அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் தீவிர சிகிச்சை பலனளித்து, விரைவில் பூரண நலத்துடன் இல்லம் திரும்ப நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து பிரார்த்திப்போம்” என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.