இன்று தங்கம் விலை சற்று சரிந்து காணப்படுகிறது. ஏற்கனவே, தங்கம் விலை சவரனுக்கு ரூ.47,000ஐ கடந்துள்ளதால், நகைப் பிரியர்களுக்கு, இல்லத்தரசிகளும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவி வரும் போர் காரணமாக கடந்த மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்தது. இதேபோல் செவ்வாய்க்கிழமையும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்தது. மறுநாள் புதன்கிழமையும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்தது. தொடர்ந்து 4வது நாளாக நேற்று வியாழக்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.47,560-க்கும், கிராமுக்கு ரூ. 45 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,945-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய தங்கம் விலை
இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று சரிந்து காணப்படுகிறது. ஏற்கனவே, தங்கம் விலை சவரனுக்கு ரூ.47,000ஐ கடந்துள்ளதால், நகைப் பிரியர்களுக்கு, இல்லத்தரசிகளும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது ஆறுதல் தருவதாக உள்ளது. தங்கம் விலை தொடர்ந்து சரியுமா? என்றும் அவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 280 குறைந்து ஒரு சவரன் ரூ. 47,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 35 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,910-க்கு விற்பனை செய்யப்படுகிறது.24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,447-க்கும், ஒரு சவரன் ரூ. 51,576-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ. 1.30 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.79.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ.79,700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.