நத்திங் நிறுவனத்தின், Nothing Phone 2a போன்கள், வருகின்ற மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2024 நிகழ்வில் வெளியாக உள்ளது.இந்நிலையில் இந்த போனின் சிறப்பம்சங்களை பற்றி தகவல்கள் வெளியாகி உள்ளது. Nothing Phone 2a மாடல் கருப்பு, வெள்ளை இரண்டு நிறத்தில் வெளியாக உள்ளது. இரண்டு வேரியண்டில் கிடைக்கிறது, 8 ஜிபி ராம் மற்றும் 128ஜிபி மெமரி ஸ்டோரேஜ் கொண்டது. இனியொன்று 12 ஜிபி ராம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டது.
8 ஜிபி ராம் மற்றும் 128ஜிபி மெமரி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் ரூ. 36,800 வரை விற்பனை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பாக வெளியான தகவலில் ரூ. 33,200 -க்கு விற்பனை செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.இந்த போனில், 1/1.5- இஞ்ச் 50 மெகாபிக்செல் சாம்சங்
S5KNG9 பிரைமரி சென்சார் மற்றும் 1/2. 76- இஞ்ச் 50 மெகாபிக்சல் சாம்சங் S5KJN1 சென்சார் உள்ளது. அல்ட்ராவைல்டு லென்ஸ் போனின் பின்பக்கத்தில் உள்ளது. 32 மெகாபிக்செல் சோனி IMX615 முன்பக்க கேமிரா கொண்டது.ஆண்டிராய்டு 14, நத்திங் ஓ.எஸ் 2.5 கொண்டது. அடுத்த ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி பார்சிலோனாவில் நடைபெறும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் நிகழ்வில் வெளியாக உள்ளது.