தங்கம் விலை மீண்டும் அதிரடியாக அதிகரித்து உச்சத்தை தொட்டுள்ளதால் தற்போது நகைப் பிரியர்களும், இல்லத்தரசிகளும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இன்று தங்கம் விலைவில் எந்த மாற்றமும் இல்லை.
இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. தற்போது இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் நிலவி வருவதால், கடந்த மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
கடந்த திங்கள்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 80 சரிந்தது. ஆனால், செவ்வாய்க்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 அதிரடியாக அதிகரித்தது. இதேபோல், புதன்கிழமையும் சவரனுக்கு ரூ.240 அதிகரித்தது. ஆனால், வியாழக்கிழமையும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 சட்டென சரிந்தது காணப்பட்டது. இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.520 அதிரடியாக அதிகரித்து ஒரு சவரன் ரூ.45,600-க்கும், கிராமுக்கு ரூ.65 அதிகரித்து ரூ.5,700-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை மீண்டும் அதிரடியாக அதிகரித்து உச்சத்தை தொட்டுள்ளதால் தற்போது நகைப் பிரியர்களும், இல்லத்தரசிகளும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மேலும், அதன் விலை எப்போது தான் சரியும் என்கிற கேள்வியுடன் காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், தங்கம் விலை இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலைக்கு விற்பனையாகிறது. அதன்படி, சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.45,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஓர் கிராம் ரூ.5,700-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.6,218-க்கும், ஒரு சவரன் ரூ.49,744-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை:
வெள்ளி விலையைப் பொறுத்தவரை, இன்று சற்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ. 79-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.79,000-க்கு விற்கப்படுகிறது.