இந்திய பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் உள்நாட்டு குறியீடுகளான மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) நிஃப்டி-50 ஆகியவை புதன்கிழமை உயர்வில் முடிவடைந்தன.
இந்திய பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் புதன்கிழமை (நவ.15) வர்த்தக அமர்வை நேர்மறையான அமர்வில் முடித்தன.தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி-50 231.90 புள்ளிகள் அல்லது 1.19% உயர்ந்து 19,675.45 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 742.06 புள்ளிகள் அல்லது 1.14% உயர்ந்து 65,675.93 ஆகவும் காணப்பட்டது.
வங்கி நிஃப்டி குறியீடு 310.45 புள்ளிகள் அல்லது 0.75% உயர்ந்து 44,201.70-ல் நிலைத்தது. ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் பங்குகள் மற்ற துறை குறியீடுகளை விட சிறப்பாக செயல்பட்டன.அதே நேரத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு, ஆட்டோ மற்றும் நிதி சேவை பங்குகள் லாபம் அடைந்தன. ஐச்சர் மோட்டார்ஸ், டெக் மஹிந்திரா, ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், இன்ஃபோசிஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகியவை என்எஸ்இ நிஃப்டி 50-ல் அதிக லாபம் ஈட்டின. இந்திய ஏற்ற இறக்கம் குறியீடு (இந்தியா VIX) 0.46% குறைந்துள்ளது.
ஆகடிவ் பங்குகள்
யெஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, கோல் இந்தியா, எம்சிஎக்ஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை என்எஸ்இயில் மிகவும் செயலில் உள்ள பங்குகளாகும்.