பிரட் அல்வா செய்வது ரொம்பவும் ஈசி. இது மிகவும் சுவையாக இருக்கும். பிரட் அல்வா செய்வது ரொம்பவும் ஈசி. இது மிகவும் சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
9 பிரட் துண்டுகள்
பொறிக்கும் அளவு எண்ணெய்
1 கை பிடி அளவு முந்திரி பருப்பு
6 பாதாம் நீளவாக்கில் நறுக்க வேண்டும்
முந்திரி 1 கை பிடி கிஸ்மிஸ்
1 கப் சர்க்கரை
1 கப் தண்ணீர்
ஏலக்காய் தூள் கால் ஸ்பூன்
1 கப் பால்
செய்முறை:
பிரட்டுகளின் ஓரங்கள் நீக்க வேண்டும். தற்போது இரண்டு துண்டுகளாக வெட்டி கொள்ள வேண்டும். எண்ணெய்யில் இந்த பிரட்டுகளை நாம் நன்றாக பொறித்து எடுக்க வேண்டும். தொடர்ந்து இதை தனியாக எடுத்து வைத்துகொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து முந்திரி, நறுக்கிய பாதாம், கிஸ்மிஸ் பழங்களை நன்றாக வறுத்து எடுத்துகொள்ளவும். இதையும் தனியாக எடுத்து வைத்துகொள்ளுங்கள். தொடர்ந்து இதில் தண்ணீர் ஊற்றி, சர்க்கரை சேர்த்து கொள்ளவும். சர்க்கரை கரைந்து, பிசு பிசுக்கும் பதம் வரும் வரை காத்திருக்கவும். தொடர்ந்து, இதில் பிரட் துண்டுகளை போட்டு நன்றாக கிளர வேண்டும். பிரட் துண்டுகள் உடைந்து ஒன்று சேரும்போது, காய்ச்சிய பாலை சேர்த்து கிளர வேண்டும். கடைசியாக வறுத்த நட்ஸை சேர்த்து கொள்ளவும். அப்படியே கல்யாண வீட்டில் செய்யும் பிரட் அல்வா போல் இருக்கும்.