அகரம் பவுண்டேஷன் மூலம் கல்வி கொடுக்கும் நடிகர் சூர்யா தற்போது இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் டி10 கிரிக்கெட் போட்டிக்கான சென்னை அணியை வாங்கி விளையாட்டிலும் கால் பதித்துள்ளார். டென்னிஸ் பந்துகளில் விளையாடப்படும் டி10 இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் தொடரில் சென்னை அணியை வாங்கியுள்ளதாக நடிகர் சூர்யா அறிவித்துள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுதுத்தியுள்ளது.
இந்தியாவில் விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் கிரிக்கெட் போட்டி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதன் காரணமாக சர்வதேச போட்டிகள் மட்டுமல்லாமல், ஆண்டுதோறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடத்தி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவது மட்டுமல்லாமல், உள்ளூர் கிரிக்கெட் வீரர்களுக்கும் போதுவமாக வாய்ப்பு கிடைக்கும் அளவுக்கு ஐபிஎல் கிரிக்கெட் மாறியுள்ளது.
அந்த வகையில் இந்தியாவில் கிரிக்கெட் முன்னோடியான டென்னிஸ் பந்துகளில் விளையாடும் கிரிக்கெட் போட்டிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்திய ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட் உள்ளது. இதில் பங்கேற்கும் சென்னை அணியை நடிகர் சூர்யா வாங்கியுள்ளதாக அவரே தனது சமூகவலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்.
மும்பை, ஸ்ரீநகர், பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகளை அமிதாப் பச்சன், அக்ஷய் குமார், ஹிருத்திக் ரோஷன் மற்றும் ராம் சரண் ஆகியோர் வாங்கியுள்ள நிலையில், சென்னை அணியை நடிகர் சூர்யா வாங்கி அவர்களுடன் இணைந்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் சூர்யா “ஐஎஸ்பிஎல் டி10 தொடரில், சென்னை அணியின் உரிமையை வாங்கியது குறித்து அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இதன் மூலம் அனைத்து கிரிக்கெட் ஆர்வலர்களுக்கும், விளையாட்டுத் திறன், பின்னடைவில் இருக்கும் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட்டின் சிறந்து விளங்கும் ஒரு பாரம்பரியத்தை உருவாக்குவோம் என்று பதிவிட்டுள்ளார். அதேபோல் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.