பணப் பரிவர்த்தனை செய்ய எளிதாக உங்கள் ஸ்மார்ட் போன் ஹோம் ஸ்கிரீனில் GPay QR code scanner ஷார்ட்கட் எப்படி செட் செய்வது என்பது குறித்து இங்கு பார்ப்போம். இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட்டுகளை UPI கணிசமாக எளிதாக்கியுள்ளது. அதில் குறிப்பாக கூகுளின் ஜி பே பணப் பரிவர்த்தனை செயலி உலகம் முழுவதும் பலராலும் பயன்படுத்தப்படுகிறது.
பொதுவாக பணப் பரிவர்த்தனை செய்ய செயலியை திறந்து தொகையை என்டரி செய்து பின் நம்பர் கொடுத்து செய்ய வேண்டும். எனினும் இதை எளிதாக்க one-click UPI payments என்ற அடிப்படையில் உங்கள் ஸ்மார்ட் போன் ஹோம் ஸ்கிரீன் பக்கத்தில் GPay QR code scanner ஷார்ட்கட் செய்வதன் மூலம் செயலியை திறக்காமல் எளிதாக பரிவர்த்தனை செய்யலாம்.
இதை நேரடியாக செய்யலாம். முதலில் உங்கள் ஜிபே செயலியை சமீபத்திய வெர்ஷனுக்கு அப்டேட் செய்து கொள்ளவும். அடுத்து செயலியின் ஐகானை long-press செய்ய வேண்டும். ஷார்ட்கட்டை உருவாக்க, GPay-ல் ‘scan any QR’ ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும். இதை உங்கள் ஹோம் ஸ்கிரீன் பக்கத்தில் கொண்டு வந்த வைக்கவும். இந்த ஷார்ட்கட் உங்கள் கேமரா பக்கத்தை ஓபன் செய்யும்.
QR குறியீடுகளை ஸ்கேன் செய்யும் மற்றும் பணம் அனுப்புவதற்கான பக்கம் ஓபன் ஆகும். அவ்வளவு தான் நீங்கள் பரிவர்த்தனை செய்யலாம். விரைவாக பணம் அனுப்புவதற்கு இந்த ஆப்ஷன் உதவியாக இருக்கும். அதோடு ஜி பே மட்டுமல்லாது வேறு எந்த செயலியாக இருந்தாலும் போன் பே, சாம்சங் பே போன்ற வேறு டிஜிட்டல் பேமெண்ட் ஆப்-களுக்கும் இதே போல் ஷார்ட்கட் செட் செய்யலாம்.