தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அரசு மற்றும் தனியார் கல்லூரிகளிலும் பொங்கல் விழாவை மாணவர்கள் வெகுவிமர்சையாக கொண்டாடி வருகின்றனர். மேலும் பொங்கல் பண்டிகையின் முக்கியமான நிகழ்வாக தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் ஜல்லிகட்டை ஊக்குவிக்கும் விதமாக கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த நகை வடிவமைப்பாளர் யு.எம்.டி. ராஜா பூதக் கண்ணாடியை கொண்டு சூரிய ஒளி மூலம் ஜல்லிகட்டு ஓவியத்தை வரைந்துள்ளார்.